இவருக்குச் செவிகொடுங்கள் HEAR YE HIM லேக் மாகாண மைதானம், லேக்போர்ட், கலிபோர்னியா, அமெரிக்கா 57-03-17 1. என்ன சம்பவித்தது-? நான் அப்படியே வியப்படைந்து கொண்டிருக்கிறேன். நீண்ட காலத்திற்கு முன்பு, புருஷரின் உடைகளை ஸ்திரீகள் தரிப்பது தவறாக இருந்தது... “அது தேவனுடைய பார்வையில் அருவருப்பாக இருக்கிறது” என்று வேதாகமம் கூறுகிறது. 2. மெதோடிஸ்டுகளே, நான் உங்களை நோக்கி ஒன்றை விளாசிவிட விரும்புகிறேன்: ஜான் ஸ்மித் தம்முடைய கடைசி பிரசங்கத்தைப் பண்ணின போது, அதை குறைவான நேரமே பண்ணினார், (அதாவது) 4 மணி நேரங்கள், அவர் மிகவும் வயதுள்ளவராய் இருந்தப்படியால், அவர்கள் அவரை மேடைக்கு சுமந்து சென்றார்கள் (packed), அவர், “ஓ, என்ன நடக்கப் போகிறது என்று எனக்குத் தெரியவில்லை, மெதோடிஸ்டு சபையின் பெண் பிள்ளைகள் கூட தங்கள் விரல்களில் மோதிரங்களை அணிகிறார்களே” என்று கூறினார். இப்பொழுதோ ஒரு குளியல் ஆடையை அணிந்து கொண்டு, கடற்கரையில் ஒரு கூட்டம் ஆண்களுக்கு முன்பாக கைகளையும் கால்களையும் நீட்டிக் கொண்டு படுத்திருப்பதைக் குறித்து என்ன-? அது மெதோடிஸ்டுகளாகிய நீங்கள் தான்.... 3. சரி, பாப்டிஸ்டுகளே: எப்போதாவது ஒரு முறை ஒரு சிறிய ஜெபம் பண்ணுகிறீர்கள்; பாப்டிஸ்டு சபையின் ஸ்தாபகராகிய ஜான் ஸ்மித், தம்முடைய கண்கள் வீங்கிப் போய் மூடிக் கொள்ள, அவருடைய காலை உணவை அவருக்கு ஊட்டும்படி, அவருடைய மனைவி ஒரு காலையில் அவரை உணவு மேஜைக்கு நடத்திச் செல்ல வேண்டியிருந்த அளவுக்கு அவர் ஜெபம் பண்ணினார். பாப்டிஸ்டுகளே, உங்களுக்கு அவமானம். 4. தெய்வீக சுகமளித்தலை விசுவாசிக்காத மெதோடிஸ்டுகளே: (நான் சமீபத்தில் அந்த தேவாலயத்தின் (shrine) அருகில் நின்றிருந்தேன்), ஒருநாள் ஜான் ஸ்மித் அவர்கள் தம்முடைய குதிரையில் சவாரி செய்து கொண்டிருந்த போது, அது விழுந்து, தன்னுடைய காலை காயப்படுத்திக் கொண்டது. அவர் குதிரையை விட்டு இறங்கி, தம்முடைய சட்டைப் பையிலிருந்து ஒரு குப்பி எண்ணெயை எடுத்து, அந்தக் குதிரைக்கு எண்ணெய் பூசிவிட்டு, அதன் மேலேறி சவாரி செய்து புறப்பட்டுச் சென்று விட்டார்-! மெதோடிஸ்டு சபையில் நீங்கள் அதைப் பிரசங்கம் செய்து பாருங்கள், அவர்கள் உங்களை கதவுக்கு வெளியே எறிந்து விடுவார்கள். ஓ, நீங்கள் நன்றாகத் தானே ஓடினீர்கள், எது உங்களைத் தடை செய்தது-? 5. சமீபத்தில் நான் என் பக்கத்தில் நின்று கொண்டிருந்த ஒரு மகத்தான பிரஸ்பிட்டேரிய சபையைச் சேர்ந்த ஒரு மனிதரிடம் நின்று கொண்டிருந்தேன், அவர் கலிபோர்னியாவிலுள்ள ஏதோவொரு மதத்தின் சுயக்கோட்பாட்டு முறையில் இருக்கிறவராயிருந்தார். அவர், “நீர் அதைக்குறித்து என்ன நினைக்கிறீர்-?” என்று கேட்டார். அவருக்கு என்னைத் தெரியாதிருந்தது. நான், “அதெல்லாம் சரிதான்” என்றேன். 6. அவர், “உமக்குத் தெரியுமா, ஒரு சமயத்தில், பிரஸ்பிடேரியன் சபையானது மேற்கு கடற்கரையிலேயே முதன்மையான சபையாக இருந்தது. ஆனால் பிறகு, கிறிஸ்தவ விஞ்ஞானம் வந்த போது, அந்த சபையானது, இதை சுக்குநூறாக உடைத்துப்போட்டு விட்டது. இப்பொழுதோ, இங்கே இந்த மனிதன் வந்து, அந்த கிறிஸ்தவ விஞ்ஞானத்தை சுக்குநூறாக உடைத்துப் போட்டுக் கொண்டிருக்கிறான்” என்றார். 7. அதற்கு நான், “நீங்கள் அந்தப் பிள்ளைகளுக்கு ஜீவ அப்பத்தைக் கொடுத்திருந்தீர்களானால், அதைப்போன்ற அப்படிப்பட்ட காரியங்களின் பின்னால் அவர்கள் போயிருக்க மாட்டார்களே. ஆனால் பசியுள்ள பிள்ளைகள் ஒரு குப்பை கூடையிலிருந்தும் (garbage can) சாப்பிடுவார்களே” என்று கூறினேன். இன்றைக்கு உலகமானது ஜீவனுள்ள தேவனுடைய வார்த்தைக்காக பசி கொண்டு இருக்கிறது. ஓ, ஜனங்களே, மேய்ப்பர்களே, உங்களுக்கு என்ன தேவை என்றால், ஜீவனுள்ள தேவனுடைய வார்த்தையைக் கொண்டு உங்கள் ஆடுகளைப் போஷிப்பது தான் (அது சரியே.) 8. அதன் பிறகு அவர் தொடர்ந்து வார்த்தையைக் கொண்டு வந்து கொண்டிருந்தார்: “ஓ, உம்முடைய பிள்ளைகள் எப்படி இதைச் செய்தார்கள்.” அவர் எப்படியாக உணர்ந்திருக்க வேண்டும். நீங்கள் ஒரு போதகராக இருந்து கொண்டு, இந்த இதே... உங்களுடைய சிந்தைக்கு நீங்கள் சென்று, அவருடைய சொந்த பிள்ளையின் மீதே குற்றம் சாட்டுகிறவர்களாகவும் இருப்பதை நினைத்து பாருங்கள், ஒழுக்கம் (discipline). 9. ஆனால், இப்பொழுது, அந்தப் பிள்ளையானது ஒரு நல்ல பிள்ளையாக இருந்தால் என்னவாகும்-? அந்தப் பிள்ளையானது அப்படியே பிதாவுக்கடுத் தவைகளில் இருந்திருந்தால் எப்படியிருக்கும்-? அப்படியானால் தனிப்பட்ட ஆசிரியர் (Tutor) எவ்வளவு கிருபையுள்ளவராய் இருந்திருப்பார். அவர் வந்து, “ஓ, அன்புள்ள ஐயா, உம்முடைய பிள்ளையானது அப்படியே “பழைய மரக்கட்டையின் சிறுதுண்டு.” அவன் அப்படியே உம்மைப் போலவே இருக்கிறான். அவன் அப்படியே உமக்கடுத்தவைகளிலேயே இருக்கிறான். ஓ, நீர் உமது இராஜ்யத்திற்காக இங்கே அந்தப் பிள்ளையைப் பார்க்கிலும் மிகச் சிறந்த ஒரு வியாபாரியை (businessman) ஒரு போதும் கண்டுபிடிக்கவே மாட்டீர்” என்று கூறியிப்பார். அப்போது தகப்பன் எப்படியாக பெருமைப்பட்டு (swell up), “ஓ, அது என்னுடைய பையன். ஓ, ஆமாம், அவன் என் குமாரன்” என்று கூறுவார். 10. பரிசுத்த ஆவியானவர் எப்படியாக தேவனுடைய சமுகத்தில் நின்று கொண்டு, “இந்த மனிதன், ஒரு உண்மையான குமாரன். இவன் உம்முடைய அலுவல்களில் இருக்கிறான்” என்று கூறுகிறார். நாம் அவருடைய அலுவல்களில் இருக்கிறோம் என்று எவ்வாறு கூறுகிறோம்-? இது அவருடைய திட்டமாக (program) இருக்கிறது: அது வார்த்தையைப் பிரசங்கம் பண்ணுவது. “நான் உயர்த்தப்பட்டிருக்கும் போது, எல்லா மனிதரையும் என்னிடத்தில் இழுத்துக் கொள்ளுவேன்.” அவர் எப்படியாக மேன்மையாகவும் சந்தோஷமாகவும் உணர வேண்டும். 11. அதன் பிறகு என்ன நடந்தது என்று உங்களுக்குத் தெரியுமா-? அந்தக் குமாரன் ஒருபோதும் அவ்விதம் சரியாக நடந்துகொள்ளாமல் இருந்தால், அவன் நிராகரிக்கப்பட்ட ஒரு பையனைக் (outcast boy) காட்டிலும் மேலானவன் அல்ல. அது சரியே. இப்பொழுது, உங்களுக்குத் தெரியுமா, நான் இன்னும் சிறிதளவு ஒரு கால்வினிஸ்டாகவே இருக்கிறேன், ஆனால் நீங்கள் ஒரு தேவனுடைய பிள்ளையாகப் பிறந்தும், நீங்கள் கீழ்ப்படியாத பிள்ளையாகவே இருக்க முடிந்தால், நீங்கள் உங்கள் வெகுமதிகள் எல்லாவற்றையும் இழந்து விடுவீர்கள், அப்பொழுது நீங்கள் வெறுமனே ஒரு சாதாரணமான பாப்டிஸ்டு, பெந்தெகோஸ்தேகாரன், நசரீன், அல்லது நீங்கள் என்னவாக இருந்தாலும் அதைக் காட்டிலும் ஒருபோதும் மேலானவனாக இருக்கவே மாட்டீர்கள். ஆனால், நீங்கள் மீண்டெழுந்து செய்ய வேண்டியதை செய்து கொண்டு, கீழ்ப்படிதலுள்ள, ஒரு உண்மையான பிள்ளையாக இருப்பீர்களானால்... இப்போதும் லூத்தரன்களே, நீங்கள் விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்பதை முதலில் கண்டு பிடித்த போது, நீங்கள் அதிலிருந்து ஒரு உபதேசத்தை (doctrine - கோட்பாட்டை, மதக் கொள்கையை) உண்டாக்கிக் கொண்டீர்கள். அது சரியே. 12. மேலும் மெதோடிஸ்டுகளே, ஜான் வெஸ்லி அந்த அக்கினி ஸ்தம்பதோடு வந்த உடனே, அது அசைவாட தொடங்கினவுடன் அவர்கள் அதற்குக்கீழாக கட்டிக்கொண்டார்கள். ஜான் வெஸ்லி அதோடு கூட வந்த போது, நீங்கள் புதிய பிறப்பையும், அல்லது பரிசுத்தமாக்கப்படுதல் என்று அவர்கள் அழைத்ததும், கிருபையின் இரண்டாவது நிச்சயமான கிரியையை கண்டு பிடித்தீர்கள். அது சரியாகத் தான் இருந்தது அது போலவே நீதிமானாக்கப்படுதலும் சரியாக இருந்தது சரியாகத் தான் இருந்தது. ஆனால், நீங்கள் பரிசுத்தமாக்கப்படுதலைக் கண்டு அறிந்தவுடன், ஒரு சிறிய பிரிவுக்கோட்டை வரைந்து கொண்டீர்கள், அல்லது வெஸ்லி, ஆஸ்பரி, மற்றும் அதைப் போன்றவர்கள் மரித்த பிறகு, உங்கள் தலைவர்கள் அவ்வாறு வரைந்து கொண்டார்கள், அதன் பிறகு நீங்கள் அதிலிருந்து ஒரு உபதேசத்தை உண்டாக்கிக் கொண்டு, நீங்களும் ஒரு எல்லைக் கோட்டை வரைந்து கொண்டீர்கள். தேவன் அக்கினி ஸ்தம்பத்தை அப்படியே நகர்த்தி கொண்டு வெளியே சென்று விட்டார். 13. பெந்தெகோஸ்தேயினர் வரங்கள் திரும்ப அளிக்கப்படுதலாகக் கண்டு கொண்டார்கள். அப்போது அவர்கள் நவமான பாஷைகளில் பேசத் தொடங்கினார்கள். பிறகு நீங்களும் அதிலிருந்து ஒரு உபதேசத்தை உண்டாக்கிக் கொண்டு, உங்கள் காலத்தை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்தீர்கள். இப்பொழுதோ, பரிசுத்த ஆவியானவர் சரியாக தொடர்ந்து அதை விட்டு வெளியேறி, உங்களையும் விட்டு விலகிச்சென்று கொண்டிருக்கிறார். அது சரியே. 14. ஓ, சகோதரனே, நீங்கள் உங்களைத்தானே மற்ற விசுவாசிகளிடமிருந்து வேறுப்படுத்தி கொள்ளும் போது, தேவன் வெளியேறி விடுகிறார் (move away). நீங்கள் ஒருவருக்கொருவர் அன்பு கூர்ந்தாகவேண்டும். “நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாக இருக்கும் போது, நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் (all-men) அறிந்து கொள்வார்கள்.” மெதோடிஸ்டும், பாப்டிஸ்டும், லூத்தரனும் கையோடு கைகோர்த்து நின்று, முன்னோக்கி அணிவகுத்துச் செல்லும் போது, நீங்கள் இதுவரை கண்டிராத தேவனுடைய ஆவியின் அதிவல்லமை மிக்க ஊற்றப்படுதல்களில் ஒன்றைக் காண்பீர்கள். 15. நாம் ஒருவரையொருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டிருக்கும் வரையில், பிசாசு கவனிக்கவே மாட்டான். “ஓ, தொடர்ந்து போய், சண்டையிட்டு, உங்களை நீங்களே கொன்று போடுங்கள்.” ஆனால் நாம் ஒரு பெரிய போர்முனையிலே ஒன்றுப்பட்டு இருப்போம். அப்போது என்ன சம்பவிக்கிறது என்று கவனியுங்கள். அப்போது என்ன நடக்கிறது என்று பாருங்கள். 16. இப்பொழுது, இந்த பையன் ஒரு சரியான பையனாக இருந்து, அவன் கீழ்ப்படிதல் உள்ளவனாகவும், கடின உழைப்பாளியாகவும் (industrious), அவன் செய்யும் படியாக தகப்பன் அவனுக்கு விட்டுச்சென்ற காரியங்களை அவன் செய்ய விரும்புகிறவனாகவும் இருந்தால், பயிற்சியாளர் (tutor) வந்து, “ஓ, அவன் ஒரு மகத்தான பையன்” என்று கூறுவார். அதன் பிறகு ஒரு குறிப்பிட்ட நாளில், அந்தப் பையன் முதிர்ச்சியடையும் போது (நீண்ட காலத்திற்கு முன்பு, சபையானது அப்படி இருந்திருக்க வேண்டும்,), இந்தப் பையன் வெளியே ஒரு பொது இடத்திற்குள் அழைத்து வரப்பட்டு, அவன் மேல் ஒரு நீள அங்கி உடுத்தப்படுகிறது, ஒரு அழகான அலங்கார வஸ்திரம் (robe). அந்த இடத்திற்கு அருகிலுள்ள எல்லாரும் அழைக்கப்பட்டார்கள். 17. இப்பொழுது, முடிக்கையில் கூர்ந்து கவனியுங்கள். ஜனங்கள் யாவரும் உள்ளே ஒன்றுக்கூட்டப்பட்டார்கள்; வழக்கமாக, நுழைவாயில் முன்பாகத் தான், அது நடந்தது. அவன் பட்டணத்தின் வாசல் முன்பு கடந்து சென்று, தன்னுடைய மகனை ஒரு உயர்ந்த ஆசனத்தின் மேல் அமரவைத்து, ஒரு அங்கியை அவனுக்கு உடுத்துவான். 18. இங்கேயுள்ள பிரசங்கிமார்களே, ஒரு குமாரனை ஸ்தானத்தில் பொருத்துவதைக் குறித்து தான் நான் பேசிக் கொண்டிருக்கிறேன், வேதாகமத்தில் அது உள்ளது என்று உங்களுக்குத் தெரியும். இப்பொழுது, கலாத்தியர், அல்லது எபேசியர் 1:5-ல், “இயேசு கிறிஸ்து மூலமாய் சுவிகாரப்புத்திரராகும்படி, குமாரர்களை ஸ்தானத்தில் பொருத்தும்படி, தேவன் நம்மை முன்குறித்திருக்கிறார்.” இப்பொழுது, அவன் துவக்க முதலே ஒரு குமாரன் தான், ஆனால் இப்பொழுது அவன் மிகவும் கீழ்ப்படிதல் உள்ளவனாயிருக்கிறான். அவன் எந்த ஸ்தாபனத்தைச் சேர்ந்தவனாகவும் இருக்கட்டும்; அதற்கு இதனோடு எந்த சம்பந்தமும் கிடையாது. அது வார்த்தைக்கு, தேவனுக்கு கீழ்ப்படிவதாக இருக்கிறது. 19. அதன் பிறகு அவன் இந்த உயர்ந்த ஆசனத்தில் அமர வைக்கப்பட்டு, அங்கே ஒரு பெரிய கொண்டாட்டம் நடந்தது, இத்தனை ஆண்டுகளாக தன்னுடைய குடும்பத்தில் இருந்த சொந்த மகனை சுவீகாரபுத்திரனாக ஏற்றுக்கொள்ளுதல், அவனை தம்முடைய குடும்பத்தில் அங்கிகரித்து விட்டார். வேறு வார்த்தைகளில் கூறினால், அவர் அவனை ஸ்தானத்தில் பொருத்தி விட்டார். குடும்பத்தில் அவனுடைய ஸ்தானத்தை அவனுக்குக் கொடுக்கிறார். அவன் ஸ்தானத்தில் பொருத்தப்பட்டிருக்கிற காரணத்தினால், அதற்குப் பிறகு, அவனுடைய தகப்பனுடைய பெயர் ஒரு காசோலையில் எவ்வளவு நன்றாக இருந்ததோ அவ்வளவு நன்றாக அந்த மகனுடைய பெயரும் இருக்கும். 20. இப்பொழுது, என்னுடைய பெந்தெகோஸ்தே சகோதரர்களே, பாப்டிஸ்டுகளே, மெதோடிஸ்டுகளே, பிரஸ்பிடேரியன்களே, நீங்கள் யாராக இருந்தாலும், நாம் இன்று எங்கே குறைவாக இருக்கிறோம் என்று பார்க்கிறீர்களா-? நீங்கள் அதைக் காண்கிறீர்களா-? நாம் நம்முடைய ஸ்தாபனத்தைக் குறித்தும், நம்முடைய அந்தஸ்தைக் குறித்தும், நம்முடைய சங்கங்களைக் குறித்தும் மிக அதிகமாக பரபரப்புக் கொண்டிருக்கிறோம்; தேவனால் நம்மோடு எதையுமே செய்ய முடியாதிருக்கிறது. நாம் பிள்ளைகளாக இருக்கிறோம், ஆனால், ஓ, நாம் பொது ஜனங்கள் முன்பாக பொருத்தப்பட்ட நிலையில் அவருடைய நீதியின் வல்லமையில் அங்கி தரிப்பிக்கப்படக்கூடிய அந்த நாள் விரைவில் நிகழ்வதாக: அப்போது நம்முடைய வார்த்தைகளும், ஜெபங்களும் வியாதியஸ்தர்களைச் சுகப்படுத்தும்; நம்முடைய பிரசங்கம் இழக்கப்பட்டவர்களை இரட்சிக்கும்; வேதாகமத்தின் மகத்தான அடையாளங்களும், அற்புதங்களும் சபைக்கு மீண்டுமாக திரும்ப அளிக்கப்படும். நம்முடைய சிறிய அற்பமான, சிறுபிள்ளைத்தனமான வேறுபாடுகளை உடைத்தெறியும் போதுதான், தேவன் இதைச் செய்வார். கவனியுங்கள், அவன் ஸ்தானத்தில் பொருத்தப்பட்டு விட்டான், அப்போது அவன் முழுமை பெற்ற மகனாக ஆகிவி டுகிறான். அப்போது அவனுடைய பெயர் நல்லதாக இருக்கிறது. அப்போது... 21. சபையோடும் அவ்விதமாக தான் இருக்கிறது, நாம் நம்முடைய சிறிய வித்தியாச பேதங்களிலிருந்து விலகி, கிறிஸ்துவிடம் வந்து, வெளி உலகத்தைக் குறித்தும், அல்லது, நம்முடைய ஸ்தாபனங்களையும் மற்றவைகளையும் குறித்து மறந்து, கீழ்ப்படிதலுள்ள பிள்ளைகளாக இருந்து, ஆத்துமாக்கள் இரட்சிக்கப்படும் படியாகவும், தேவனுடைய காரியங்களைச் செய்யும் படியாகவும் பிதாவுக்கடுத்தவைகளில் இருக்க முடியுமானால், சிறிது நேரம் கழித்து தேவன் ஒரு பக்கமாக நம்மை வைத்து, பரிசுத்த ஆவியால் நம்மை அபிஷேகம் பண்ணுவார், அப்போது நாம் அவருடைய இராஜ்யத்தில் நம்முடைய ஸ்தானத்தில் பொருத்தப்படுகிறோம். சிலர் ஞானத்தின் வரங்களையும், சிலர் அறிவையும், சிலர் அந்நிய பாஷைகள் வரத்தையும், சிலர் சுவிசேஷத்தைப் பிரசங்கம் பண்ணும் வரத்தையும் கொண்டிருக்கிறார்கள், சிலரோ தீர்க்கதரிசிகளாக இருக்கிறார்கள், மற்ற வரங்களையும் கொண்டு இருக்கிறார்கள். 22. ஆனால், இப்பொழுது, தேவன் சபைக்குள் வரங்களை அசையப்பண்ணுகிறார். என்றும் நான் கூறலாம், அது என்னுடைய இருதயத்தில் இருக்கிறது. பாருங்கள், சகோதரனே, நான் உன்னைப் புண்படுத்த விரும்பவில்லை. சகோதரியே, நான் உன்னையும் புண்படுத்த விரும்பவில்லை. ஆனால் இந்த வரங்களை உடைய பெந்தெகோஸ்தே சபையும், முழு சுவிசேஷ ஜனங்களாகிய நீங்களும், இவைகளை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்று உங்களுக்குத் தெரியவில்லை. அவைகள் வரங்களாக உள்ளன; அவைகள் எல்லாம் சரி தான், ஆனால் நீங்களோ அவைகளைக் கொண்டு கட்டுப்பாடற்ற முறையில் போய்க் கொண்டு இருக்கிறீர்கள். வரங்களை அவைகளின் ஸ்தானத்தில் வையுங்கள். 23. பாருங்கள், முதலாவது வரமானது ஞானமாக இருக்கிறது... என்று உங்களுக்குத் தெரியாவிட்டால், அறிவைக் கொண்டிருப்பது உங்களுக்கு என்ன நன்மையைச் செய்யப் போகிறது. உங்களுடைய அறிவை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்று அறிந்து கொள்ள ஞானத்தை உடையவர்களாக இருக்கிறீர்களா-? அந்நிய பாஷைகளில் பேசுவதைச் சரியாக எப்போது, எப்படி வைத்திருப்பது என்பதை அறிந்து கொள்ளும் ஞானம் உங்களுக்கு இராவிட்டால், நீங்கள் அந்நிய பாஷைகளில் பேசுவது என்ன நன்மையைச் செய்யும்-? நான் என்ன கூற வருகிறேன் என்பது புரிகிறதா-? தெய்வீக சுகமளித்தலானது அப்படியே பிளவுகளாக போகும் போது, தெய்வீக சுகமளித்தலை பிரசங்கிப்பது என்ன நன்மையைச் செய்யும்-? ... எப்படி என்று உங்களுக்குத் தெரியவில்லை. 24. “நான் என்னுடைய ஜீவியத்தில் இரு வகையான ஜனங்களைச் சந்தித்தேன், அவர்கள் அடிப் படைவாதிகள் மற்றும் பெந்தெகோஸ்தேயினராக இருக்கிறார்கள்” என்று நான் கூறியிருக்கிறேன். அடிப்படைவாதிகள் தாங்கள் யார் என்பதை ஸ்தான ரீதியாக அறிந்து இருக்கிறார்கள், ஆனால் அவர்களுக்கு விசுவாசம் கிடையாது. வார்த்தை இன்னுமாக ஒரு போதும் வேர் கொள்ளவில்லை, ஆகவே அது ஜீவியத்தில் வருவதில்லை. ஆனால் ஸ்தான ரீதியாக, அவர்கள் எங்கேயிருக்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும். பெந்தெகோஸ்தே-யினருக்கோ விசுவாசம் உண்டு, ஆனால் அவர்கள் யாரென்று அவர்களுக்குத் தெரிவதில்லை. இது ஒரு மனிதனுக்கு வங்கியில் பணமிருந்தும், ஒரு காசோலையை எழுதத் தெரியாதது போல் இருக்கிறது, மற்றவனுக்கோ காசோலையை எழுத முடிந்தும், அவனுக்கு வங்கியில் எந்தப் பணமும் இல்லை. உங்களால் எப்பொழுதாவது அவைகளை ஒன்று சேர்க்க முடிந்தால். ஓ, தேவனே, ஒரு ஆவிக்குரிய அடிப்படைவாத சபையையோ, அல்லது ஒரு அடிப்படைவாத பெந்தெகோஸ்தே சபையையோ எங்களுக்கு தாரும். 25. உங்களுக்கு நிறைய விசுவாசம் உள்ளது, ஆனால் அதை எவ்வாறு ஸ்தானத்தில் வைப்பது என்று உங்களுக்குத் தெரியவில்லை; அது அப்படியே கட்டுப்பாடற்ற விதத்தில் நடந்து கொள்கிறது. அது நன்மையாக முடிவதைக் காட்டிலும், அந்தவிதமாகச் செய்வது அதிக நிந்தையைத் தான் கொண்டு வரும். அதை வேதாகமத்தில் பொருத்திப் பாருங்கள். இது தான் கட்டிட வரைப்பட நகலாக (Blueprint) இருக்கிறது; ஜனங்கள் என்ன வேண்டும் என்பது அல்ல, ஆனால் தேவன் என்ன எதிர்பார்க்கிறார் என்பது தான். அவருடைய திட்டத்தோடு வரிசைப்படுத்திக் கொள்ளுங்கள். அது தான் வித்தியாசம்; ஆகையால் தான் நாம் செல்ல வேண்டிய வழியில் நாம் தொடர்ந்து போகாமல் இருக்கிறோம், நண்பர்களே. 26. இப்பொழுது, அவர்கள் அங்கே நின்று கொண்டிருந்த நேரத்தில், கவனியுங்கள், தேவனுடைய பிரசன்னத்தில் இருந்த போது... இப்பொழுது, பழைய ஏற்பாட்டில், அவர் ஒரு போதும் மனிதனை எதையாகிலும் செய்யும்படி கேட்டதேயில்லை. ஆனால் காரியங்களை அவராகவே செய்து விடுவார், மனிதன் மரிக்கும்படியாக, மரணத்தண்டனைத் விதிக்கப்பட்ட போது, தேவனால் அவனை மீட்க முடிந்த ஒரே வழி, மாம்சத்தில் இறங்கி வந்து, அவனுடைய இடத்தை எடுத்துக்கொள்வதாகத் தான் இருந்தது. 27. அந்தக் காரணத்தால் தான், கடந்த இரவு அவ்விதமாகப் பிரசங்கித்து அதை அந்த வழியாக செய்தேன்: கிறிஸ்து ஒரு மனிதனைக் காட்டிலும் மேலானவர்; அவர் தேவனாக இருக்கிறார்; அவர் இறங்கி வர வேண்டியிருந்தது, பாவத்தை ருசிபார்க்க அவர் மாம்சத்தின் ஆடையுடுத்த (clothed) வேண்டியிருந்தது; அவரால் வேறொரு தனிநபரை அனுப்ப முடியாதிருந்தது; அவர் அவ்வாறு செய்வது நீதியாக இல்லாதிருந்தது; அவர் தாமே வர வேண்டியிருந்தது. அவர் ஒரு கன்னிகையின் மேல் நிழலிட்டு, அந்தக் குமாரனைப் பிறப்பித்த ஒரு இரத்த உயிரணுவை சிருஷ்டித்தார், தேவன் அந்த குமாரனுக்குள் வாசம் செய்து, இங்கே பூமியின் மேல் கூடாரம் இட்டுக் கொண்டார். அவர் இம்மானுவேலாக இருந்தார், ஒரு தீர்க்கதரிசியாக அல்ல, ஆனால் “தேவன் நம்மோடு-!” தேவன் கிறிஸ்துவுக்குள் இருந்து, உலகத்தைத் தம்மோடு ஒப்புரவாக்கிக் கொண்டார் அவரால் பாவத்தையும் மரணத்தையும் ருசிபார்க்கக் கூடிய ஒரே வழி அதுவாகத் தான் இருந்தது, அவர் மனிதனைப் போன்று சாவுக்குரியவராக வேண்டியிருந்தது. 28. ரூத்துடைய இனத்தான் மீட்பர், நீங்கள் அநேகமாக அந்தச் செய்திகளை (sermons) வாசித்தது போன்று, நான் நாட்டின் எல்லா இடங்களிலும் அதிகமாக அதன் பேரில் பிரசங்கம் செய்து இருக்கிறேன்; ஓ, அவர் ஒரு மீட்பராக இருக்க வேண்டுமானால், அவர் ஒரு இனத்தானாக இருக்க வேண்டியிருந்தது. தேவன் மீட்பராக இருக்க முடிந்த ஒரே வழி என்னவென்றால், அவர் நம்முடைய உறவினராக (Kinfolks) ஆக வேண்டியிருந்தது. அவர் மாம்சமாகி நம் மத்தியில் வாசம் பண்ணினார். அவர் நம்முடைய உறவினராக (Kinfolks) இருக்கிறார். அவர் என்னையும் உங்களையும் போன்று மாம்சமுள்ள ஒரு மனிதராக இருந்தார், ஆனால் நம்மைப் போல ஐம்புலன்களை உபயோகித்து பாடுபடும் படியாகவும் உணரும் படியாகவும், ருசிக்கும் படியாகவும் தேவன் அவருக்குள் வாசம் செய்தார். அவர் ஒரு மீட்பராக (Redeemer) ஆனார். 29. அதன் பிறகு, அவர் அங்கே மறுரூப மலையின் மேல் (Mount Transfiguration) நின்று கொண்டு இருந்த போது, முன்பு அவர் புத்திரசுவிகாரத்தின் கீழாகவும் அல்லது குமாரர்களை தன் ஸ்தானத்தில் பொருத்துவதைக்குறித்தும் எதை செய்ய வேண்டுமென்று மனிதர்களிடம் கேட்டுக் கொண்டாரோ அதை அங்கு உலகத்திற்குக் காண்பித்துக் கொண்டிருந்தார். 30. பேதுரு முழுவதும் உற்சாகப்பட்டு விட்டான். வழக்கமாக, மனிதர்கள் இயற்கைக்கு மேம்பட்ட பிரசன்னத்தில் இருக்கும் போது, அவர்கள் முழுவதும் உற்சாகப்படுகிறார்கள். அவர்கள் இன்னுமாக பூமியின் சிருஷ்டிகளாக இருக்கும் காரணத்தினால் வழக்கமாக தங்களைத் அடக்கிக்கொள்ள முடிவதில்லை, அவர்கள் பரலோகத்தின் சிருஷ்டிகளாகவும் கூட இருக்கிறார்கள். ஆனால் அந்த பரலோக முன் சுவையானது அவர்களைக் கட்டுப்படுத்த முடியாத விதத்தில் நடந்து கொள்ளும்படி செய்கிறது. 31. அதுதான் பெந்தெகோஸ்தே சபைக்குள் சம்பவித்துள்ளது. புரிகிறதா-? முன்ருசியானது, நீங்களாகவே அதை எப்படி கட்டுப்படுத்துவது என்று உங்களுக்குத் தெரியவில்லை. காரணமற்ற எல்லாவற்றையும் (all out of reason) நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். அந்த அந்நிய பாஷைகளின் வரங்களையும், அதை வியாக்கியானம் பண்ணுகிற வரங்களையும் எவ்வாறு ஸ்தானத்தில் பொருத்துவது என்று உங்களுக்குத் தெரியவில்லை. சில சமயங்களில், பிரசங்கிமார்கள் பேசிக் கொண்டிருக்கையில், உரிமையை உயர்த்தி பேசுவார்கள் பிரசங்கி பேசும் போது உரிமை, அது வேதாகமத்திற்கு முரணானது. நீங்கள், “ஓ, தேவன் இதைக் குறித்த ஒரு செய்தியைக் கொடுத்தார். அது இந்த வேதாகமத்தைக் காட்டிலும் புதியது (fresher)” என்று கூறலாம். இல்லை, அதுவல்ல-! அது... 32. உங்கள் வார்த்தைகள் தவறிப் போய்விடும், மற்ற எல்லாமே தவறிப் போய் விடும், ஆனால், வேதம் இவ்வாறு கூறுகிறது “ஆவியைப் பெற்ற எவனோ, அல்லது ஒரு தீர்க்கதரிசியோ உங்கள் மத்தியில் இருப்பானானால், நான் எழுதியவைகள் தேவனுடைய கற்பனைகளென்று அவன் ஒப்புக் கொள்ளக்கடவன்” “பிரசங்கிக்கப்பட்டு வருகிற சுவிசேஷத்தைக் காட்டிலும், வேறொரு சுவிசேஷத்தை, பரலோகத் திலிருந்து வருகிற ஒரு தூதன் பிரசங்கம் பண்ணினாலும், அவன் சபிக்கப்பட்டவனாய் இருக்கக்கடவன்.” நான் என்ன கூற வருகிறேன் என்று புரிகிறதா-? 33. எனவே, தேவனுடைய இராஜ்யத்திற்குள் ஜனங்களைக் கொண்டு வர, அவர்களோடு கரங்களைக் குலுக்கிக் கொள்ள முயற்சிப்பீர்களானால், நீங்கள் தவறாய் இருக்கிறீர்கள். அவர்கள் பரிசுத்த ஆவியினால் தான் தேவனுடைய இராஜ்யத்திற்குள் பிறக்கிறார்கள். அவர்கள் முகத்தை முன்னோக்கி வைத்தோ, பின்னோக்கி வைத்தோ, தெளித்தோ, ஊற்றியோ, ஒரு நாமத்திலோ, அல்லது வேறு நாமத்திலே ஞானஸ்நானம் பண்ணப்படுவதில்லை. அவர்கள் தேவனுடைய ஆவியினால் தான் தேவனுடைய இராஜ்யத்திற்குள் பிறக்கிறார்கள். 34. பேதுரு உற்சாகப்பட்டான். அவன், “ஆண்டவரே, நாம் மூன்று கூடாரங்களைப் போடுவோம். மோசேக்கு ஒரு கூடாரத்தை போடுவோம் எல்லாரும் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ள விரும்புகிறவர்கள் மோசே நியாயப்பிரமாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தினான். நியாயப் பிரமாணத்தையும், கற்பனைகளையும், மாமிசத்தையும் புசிக்காதே அதைப் போன்ற மற்றவைகளையும் கடைபிடிக்க விரும்புகிற எல்லாரும், அவர்கள் அதைச் செய்யட்டும். நாம் எலியாவுக்கு ஒரு கூடாரமும், உமக்கு ஒரு கூடாரமும் போடுவோம்” என்றான். 35. இப்பொழுது, மோசே நியாயப் பிரமாணத்தை, சட்டங்கள் எல்லாவற்றையும் பிரதிநிதித்துவப்படுத்தினான். நியாயப் பிரமாணம் மூலமாக எந்த மனிதனும் இரட்சிக்கப்பட முடியாது. நியாயப் பிரமாணம் இரட்சகன் அல்ல, நியாயப் பிரமாணமானது பள்ளி ஆசிரியனாக (schoolmaster) இருந்தது. நியாயப் பிரமாணமானது தண்டனையாக இருந்தது. நியாயப் பிரமாணம் பாவத்தை பெரிதாக்கிக் காட்டியது. இன்னொரு வழியில், நியாயப் பிரமாணம் ஒரு சிறைச்சாலை ஆவி உன்னை சிறைக்குள் போட்டு விடும் ஆனால், அதனால் விடுவிக்க முடியாதிருந்தது; அதைக்கொண்டு மீட்டுக் கொள்ளும்படியாக அதற்குள் எதுவும் இல்லாதிருந்தது. இயேசுவோ மீட்பராக இருந்தார். இப்பொழுது, மோசே அந்த நியாயப் பிரமாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தினான். நியாயப் பிரமாணத்தின் மூலமாக, எந்த மனிதனும் இரட்சிக்கப்படவில்லை. அந்தக் காரணத்தினால் தான் அவர் பரலோகத்திலிருந்து மூன்று சாட்சிகளைக் கொண்டு வந்தார். 36. இப்பொழுது, எலியாவோ, தேவனுடைய நீதியைப் (justice) பிரதிநிதித்துவப்படுத்தினான். என்னுடைய சகோதரனே, தேவனிடமிருந்து உனக்கு நீதி தான் தேவை என்று கூற நீ துணிவு கொள்வாயா-? நீ பாவத்தில் பிறந்து, அக்கிரமத்தில் உருவாகி, பொய்களைப் பேசுகிறவனாக உலகத்திற்கு வந்திருக்கும் போது. நீ நீதியையா (justice) விரும்புகிறாய்-? தேவன், “அதை நீ புசிக்கும் நாளில், சாவாய்” என்று கூறியிருக்கிறார். நீதி அதின் தீர்வை நிறைவு செய்கிறது. உனக்கு நீதி கிடைத்துவிட்டது, நீங்கள் முடிந்து விட்டீர்கள் (gone). 37. நியாயப்பிரமாணமா-? நியாயப்பிரமாணமானது அதை உங்களுக்கு முன்பாக கொண்டு வந்து, “இதோ, நீ கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருக்கிறாய்; நீ பாவம் செய்து உள்ளாய்; நீ மீறுதல்களை நடப்பித்திருக்கிறாய்; உன்னுடைய சிறைச்சாலை உனக்காக திறந்திருக்கிறது, அது நரகம் தானே: அதற்குள் போ” என்று கூற மாத்திரமே செய்கிறது. அதைத் தான் நியாயப்பிரமாணம் சொன்னது. மேலும் நீதிக்கு (justice) ஒரு நியாயப் பிரமாணம் கூட தேவையில்லாதிருந்தது. வார்த்தை ஏற்கனவே உரைக்கப்பட்டு விட்டது. அவ்வளவு தான். தேவன் தம்முடைய வார்த்தையைக் காத்துக் கொள்ள வேண்டியவராய் இருக்கிறார். 38. எலியாவை கவனித்துப் பாருங்கள், தேவன்... அவன் தேவனுடைய நீதியின் பாதையில் (line) இருந்தான். அவன் ஒரு மலையின் மேல் உட்கார்ந்திருந்து, “நான் தேவனுடைய மனுஷனாக இருந்தால்” என்றான், ஐம்பது பேர்களைக் கொண்ட அந்த படைத்தலைவன் வந்த போது, அவன், “பரலோகத்திலிருந்து அக்கினி வரக்கடவது” என்றான். [சகோ.பிரன்ஹாம் தம்முடைய விரல்களைக் கொண்டு சுடக்கொலி செய்கிறார் - ஆசிரியர்.] அந்த 50 பேரும் மரித்துப் போனார்கள் (away went). 39. “நல்லது,” அந்த இராஜாவோ, “ஒருவேளை மின்னல் அவர்களைத் தாக்கியிருக்கும். ஓ, அற்புதங்களின் நாட்களை நான் நம்புவதில்லை, எனவே ஒருக்கால் மின்னல் அல்லது ஏதோவொன்று அவர்களைத் தாக்கியிருக்கும்; அது எதிர்பாராமல் நடந்தது தான். நான் வேறு 50 பேரை அனுப்புவேன்” என்றான். 40. அந்தக் கண்டிப்பான, வயதான நீதியின் தீர்க்கதரிசி அங்கே மேலே நின்று கொண்டு, “நான் தேவனுடைய மனுஷனானால், பரலோகத்திலிருந்து (Heaven) அக்கினி வரக்கடவது” என்று கூற, அக்கினி இறங்கி, வேறு 50 பேரை பட்சித்தது. அப்படியானால் அது எதிர்பாராமல் நிகழ்ந்த ஒன்று இல்லை ஏன்-? அவன் தேவனுடைய நீதியின் வரிசையில் இருந்தான். உங்களில் யாராவது தேவனுடைய நீதியில் நிற்க முயற்சித்து துணிவு கொள்கிறீர்களா-? உங்களில் யாராவது நியாயப்பிரமாணத்தின் மூலமாக பரலோகத்திற்கு போகும்படி முயற்சிக்கத் துணிவீர்களா. நாம் எங்கே நின்று கொண்டிருக்கிறோம் என்பதைப் பாருங்கள். 41. பேதுரு, “நாம் மூன்று கூடாரங்களைப் போடுவோம்” என்று கூறினான். இருளைப் பாருங்கள். நாம் துவக்கத்திலிருந்தே தண்டனைத் தீர்ப்புக்கு உள்ளாகித் தான் இருக்கிறோம். தேவனுடைய நீதிக்கு இழப்பீடு அவசியமாயிருக்கிறது; இழப்பீட்டுக்கு பலன் தேவையாக இருக்கிறது; அந்த பலன் மரணமாக இருக்கிறது. நியாயப் பிரமாணம் அதை பெரிதாக்கிக் காட்டி, நம்மை கைது செய்து, சிறைச்சாலையில் வைக்கிறது, அதைத் தான் அது கொடுக்கிறது. மனித இனத்திற்காக என்னவொரு இருளான காட்சி. 42. ஆனால், ஓ, என்னுடைய அன்பான, பரிதாபமான பலவீனமான நண்பனே, உன்னுடைய தலையை இப்பக்கம் திருப்பு. அங்கே இயேசு நின்று கொண்டிருந்தார் பழைய ஏற்பாட்டில் இருந்த அந்தக் குமாரனைப் போல, இயேசு மகிமையடைந்தார். அவர் மகிமையடைந்தார், அது சாத்தியமாயிற்று. ஓ, அவருடைய வஸ்திரங்கள் சூரியனைப் போன்று பிரகாசித்தது, மேலும் பரலோகத்திலிருந்து, “இவர் என்னுடைய நேச குமாரன்; இவருக்குச் செவிகொடுங்கள்” என்று ஒரு சத்தமுண்டாயிற்று. 43. எனவே, நம்முடைய ஸ்தாபனங்களும், நம்முடைய வருத்தங்களும், நம்முடைய வித்தியாச பேதங்கள் யாவும் அர்த்தமற்றவை இயேசு தேவனுடைய அன்பையே பிரதிநிதித்துவப் படுத்தினார். “தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் ஒரு போதும் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.” 44. எனவே அது நீதியில் இருப்பதில்லை. அது நியாயப் பிரமாணத்திலோ, அல்லது நீங்கள் செய்திருக்கிற எதிலுமோ வைக்கப்படுவதில்லை. அது கிறிஸ்து பூமிக்கு வந்து, உங்களுடைய இடத்தை எடுத்துக்கொண்ட தேவனுடைய இரக்கமாகவும் அன்பாகவும் உள்ளது. 45. தேவன் தாமே, “இப்பொழுது பாருங்கள், நான் இதை பரலோகத்திற்கு முன்பாக பகிரங்கமாக அறிவிக்கப் போகிறேன்: எந்த மனிதனும் நியாயப் பிரமாணத்தின் மூலமாக இரட்சிக்கப்பட முடியாது, அது முடிவு பெற்றது பூமியின் மேலுள்ள எந்த மனிதனும் நியாயப் பிரமாணத்தின் மூலமாக இரட்சிக்கப்பட முடியாது என்பதையும், எந்த மனிதனும் நீதியின் மூலமாக இரட்சிக்கப்பட முடியாது என்பதையும் நான் அறிவிக்கிறேன் (declare). “இவர் என்னுடைய நேச குமாரன்.” பாப்டிஸ்டு சபையைச் சேர்ந்து கொள்வதன் (belonging) மூலமாக எந்த மனிதனும் இரட்சிக்கப்பட முடியாது. மெதோடிஸ்டு சபையைச் சேர்ந்து கொள்வதன் மூலமாக, எந்த மனிதனும் இரட்சிக்கப்பட முடியாது. பெந்தெகோஸ்தே சபையைச் சேர்ந்து கொள்வதன் மூலமாக, எந்த மனிதனும் இரட்சிக்கப்பட முடியாது. ஆனால், “இவர் என்னுடைய நேச குமாரன், இவரில் வாசம் பண்ண பிரியமாயிருக்கிறேன். இவருக்குச் செவி கொடுங்கள்” என்றார். 46. நீங்கள் ஏன் அவருக்குச் செவி கொடுக்கிறீர்கள்-? அவர் மாத்திரமே இரட்சிக்க முடியும். அவர் மாத்திரமே சமாதானம் அருள முடியும். அவர் மாத்திரமே சுகப்படுத்த முடியும். நியாயப்பிரமாணம் சுகப்படுத்த முடியாது; நீதியும் (justice) தேவைப்படாது. ஆனால் தேவனுடைய குமாரனால் தான் இரட்சிக்கவும், சுகப்படுத்தவும், சமாதானத்தை அருளவும் முடியும். “நம்முடைய மீறுதல்களினிமித் தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமத்தின் நிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்: நமக்குச் சமாதானத்தை உண்டு பண்ணும் ஆக்கினை அவர் மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமானோம்.” அவருக்குச் செவிகொடுங்கள். 47. நீங்கள் மெதோடிஸ்டுகளாக இருந்தால், அங்கேயே தரித்திருங்கள், ஆனால் அவருக்குச் செவி கொடுங்கள். நீங்கள் பெந்தெகோஸ்தேக்காரர்களாக இருந்தால், அங்கேயே தரித்திருங்கள், ஆனால் அவருக்குச் செவி கொடுங்கள். நீங்கள் என்னவாக இருந்தாலும், நீங்கள் எங்கே அங்கத்தினராக இருந்தாலும், அதற்கு இதனோடு எந்த சம்பந்தமும் கிடையாது. நீங்கள் மறுபடியும் பிறந்த தேவனுடைய பிள்ளையாக இருந்து, பரிசுத்தாவியால் நிறையப் பட்டு, ஒரு ரோமன் கத்தோலிக்கனாக இருந்தால், அவருக்குச் செவி கொடுங்கள். தேவன் மற்றவைகளைப் பார்த்துக் கொள்வார். நீங்கள் வெறுமனே அவருக்குச் செவி கொடுங்கள், அப்பொழுது தேவன் மற்றவைகளைப் பார்த்துக் கொள்வார். 48. சகோதரர்களே, நமக்கு இன்று தேவையாக இருப்பது என்னவென்றால், முடிக்கையில், இது தான் என்னுடைய கடைசியான கருத்தாக உள்ளது: நமக்கு ஒரு சவால் விடுபவர் (challenger) தேவை. தேவனுடைய அன்பைக் காண்பிக்க நமக்கு யாரோ ஒருவர் தேவையாயிருக்கிறது. நமக்கு ஏதோவொரு சபையோ, சில ஜனக்கூட்டங்களோ தேவையாக இருக்கிறது. இங்கே இந்தப் பள்ளத்தாக்கில், ஒருகூட்ட ஜனங்கள் தேவையாக இருக்கிறது, உலகத்தின் ஒவ்வொரு பாகத்திலும், பரிசுத்தாவியால் உங்கள்மேல் நிழலிட்டு, உங்களுக்கு அன்பை அருளியிருக்கிற தேவனிடத்தில் உள்ள உண்மையான விசுவாசத்தை (loyalty) காண்பிக்கும் ஒரு கூட்ட ஜனங்கள் தேவையாக இருக்கிறது. அங்கே... *******